TAMIL

Sunnah Reloaded

சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்) அவர்களைப் பற்றியோ , அல்லது நபியிடம் இருந்து நபித்துவத்திற்கு முன்பு அல்லது பின்பு , மேலும் அவர்களுடைய அறிக்கைகள் , செயல்கள் , உறுதிப்பாடு , சுய சரிதை , அவர்களுடைய உடல் பாத்திரமும் , காரணிகளையும் பற்றி கூறுவது சுன்னாவாகும்.

 

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.”

அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை”    {53:3-4}

 

சுன்னாவை பின்பற்றுவதின் முக்கியத்துவம்

நபி(ஸல்) அவர்களின் வழிமுறை அல்லாஹ்விடமிருந்து (அருளப்பட்ட) வெளிப்பாடாகிய இஸ்லாமிய மார்க்கதின் தெய்வீக முல ஆதாரமாகவும் , குர்ஆனுடைய விளக்கவுரையாகவும் , மனித இனம் பின்பற்றக் கூடிய சரியான எடுத்துக்காட்டாகவும் இந்த சுன்னா இருக்கிறது. எவனொருவன் இவ்வழிமுறையை ஏற்க மருத்து, அதனை மார்க்த்தின் ஒருங்கிணைந்த பகுதியாய் கீழ்படியாமலும் இருக்கிறானோ அவன் ஓரு விசுவாச துரோகி (அல்லது) நிராகரிப்பாளன் என்று இஸ்லாமிய அறிஞர்கள் முழு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

 

இமாம் இப்னு ஹஜம் கூறுகிறார்கள்:- ஒரு மனிதன், நான் குர்ஆனில் காணுவதை மட்டும் ஏற்கிறேன் எனக் கூறினால் முஸ்லிம்களின் ஒருமித்த கருத்துப்படி அவன் நிராகரிப்பாளன் ஆகிறான்.

 

நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றுவது, நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு காட்டும் ஒரு பகுதியாகவும். ஆகையால் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருக்கிறோம் என்று நாம் கூறுகையில், அவர்களின் வழிமுறைகளை பின்பற்றியவர்களாகவும், அவர்களின் போதனைகளை கடைபிடிப்பதில் பயிற்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

(நபியே! இன்னும்) நீர் கூறும்: அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை   {3:32}

 

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். {4:59}

 

சுன்னா அல் மஹ்ஜுரா என்றால் என்ன?

 

இந்த வழிமுறை மறக்கப்பட்டது அல்லது எப்பொழுதாவது பயிற்சி பெற்றது.

நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் நாம் அதிகமான(நிறைய) பயிற்சிகளை புறக்கணித்தும், மறந்தும் மேலும் நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்காமலும் இருக்கிறோம்.

இந்த சிறிய எளிய செயல்பாடுகள் அதிகமான நன்மைகளை கொண்டது.

 

அதிகமாக மறக்கப்பட்ட வழிமுறைகளில் சில :-

 

  1. மழையில் நனைவது

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது” என்று பதிலளித்தார்கள்.     [முஸ்லிம்]

 

 

  1. ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் மிஸ்வாக் பயன்படுத்துவது

 

“என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் பல் துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன் ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   [மவத்தா மாலிக்]

 

 

  1. அதிகமாக பாவமன்னிப்பு தேடுவது

 

இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபியவர்கள் ஓர் அவையில் இருந்து எழுவதற்கு முன்னதாக நூறு தடவை பின்வரும் இந்த துஆவை ஓதியதாக கணக்கிடப்பட்டுள்ளது. {ரப்பி ஃபிர்லீ வதுப் அலைய இன்னக அன்த தவ்வாபுர்ரஹீம்} [என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் பக்கம் கருணையுடன் திரும்புவாயாக! திண்ணமாக நீ(அடியார்களின்) பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகம் ஏற்பவனாகவும் பெரிதும் மன்னிப்பவனாகவும் இருக்கிறாய்]”     [அபூ தாவூத், திர்மிதி]

 

  1. ஹிஜாமா- (இரத்தம் குத்தி எடுத்தல்) செய்வது

 

அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் நபி(ஸல்) கூறியதாக கூறினார்கள் “நீங்கள் பெறும் சிறந்த சிகிச்சை இரத்தம் குத்தி எடுப்பது”     [முஸ்லிம்]

 

 

  1. புத்தாடை அணியும் போது ஓதும் துஆ

 

நபி (ஸல்) அவர்கள், புத்தாடை அணிந்தால் அதற்கு பெயர் சூட்டுவர்கள், {உதாரணமாக:- தலைப்பாகை, சட்டை, ௮ங்கி} பிறகு பிரார்த்தனை செய்வார்கள் {அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கசவ்தனீஹீ அஸ்அலுக ஹைரஹு வஹைர மா சுனிஅலஹு, வஅவூது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா சுனிஅலஹு} [யா அல்லாஹ்! உனக்கே எல்லாப் புகழும். நீயே எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையையும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம்கோருகிறேன். மேலும் இதன் தீமையை விட்டும் எதற்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்]      [அபூ தாவூத், திர்மிதி]

 

 

  1. பத்து வசனங்கள் ஓதியாவது தஹஜ்ஜத் தொழுவது

 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “எவனொருவன் ஒழுங்கு முறையாக பத்து வசனங்களை ஓதி இரவில் தொழுது வருகிறானோ அவன் அலட்சியமானவர்களில் பதிவு செய்யப்பட மாட்டான்; எவனொருவன் நூறு வசனங்களை ஓதி இரவில் தொழுது வருகிறானோ, அவன் அல்லாஹ்விற்கு கீழ்படிந்தவர்களில் பதிவு செய்யப்படுவான்; மேலும் எவனொருவன் ஆயிரம் வசனங்களை ஓதி இரவில் தொழுது வருகிறானோ, அவன் பிரமாண்டமான வெகுமதிகளை பெறுபவனாக பதிவு செய்யப் படுவான்.”            [அபூ தாவூத்]

 

 

  1. பாவம் செய்த பின்பு இரண்டு ரக்அத் பாவ மன்னிப்பு வேண்டி தொழுதல்

 

“எந்த ஒரு ஆண் பாவம் செய்து, பின்பு ஒழுங்கு முறையாக உளூச் செய்து, பிறகு இரண்டு ரக்அத் தொழுது [அறிவிப்பாளர்களில் ஒருவரான] மிஸ்அர் கூறினார்: பிறகு தொழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரினால், அல்லாஹ் அவனை மன்னிப்பான்.”        [இப்னு மாஜா]

 

 

  1. நன்றி கோரி சஜ்தா செய்தல்

 

அல் பாகவி அவர்கள் சுன்னாவைப்(வழிமுறை) பற்றிய விளக்கவுரையில் கூறினார்கள். யாரொருவர், அவர் விரும்பியதைக் கொண்டு ஆசீர்வதிக்கப் பட்டு அல்லது அவர் வெறுத்ததிலிருந்து காப்பாற்றப்பட்டால் இதற்காக நன்றி கோரி ஸஜ்தா செய்வது நபியவர்களின் வழிமுறையாகும்.

 

 

  1. எல்லா சபைகளையும் முடித்து வைப்பதற்கான துஆவை ஓதுவது

 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “யாராயினும் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, வீண் பேச்சில் ஈடுபடாது, எழுவதற்கு முன்பு {சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக்கவஅதூபு இலைக்} [யா அல்லாஹ்! உன்னை புகழ்வதுடன் உனது தூய்மையையும் எடுத்துரைக்கிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்] இந்த துஆவை ஓதினால், இந்த அவையில் அவன் தெரிந்தோ, தெரியாமலோ புரிந்த பாவத்திற்காக அல்லாஹ் அவனை மன்னிப்பான்.       [திர்மிதி]

 

 

  1. உயில் எழுதுவது

 

                                 ” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் மூன்று இரவுகள் கழிப்பது சரியில்லை.”            [நஸயீ]

 

 

ஆகவே முஸ்லிமாகிய நாம் இவ்வழி முறைகளையும், இன்னும் கைவிடப்பட்ட பல வழிமுறைகளையும் அதிக ஆர்வத்தோடு போராடி பின்பற்ற வேண்டும்.

இமாம் மாலிக்(ரஹ்) [மிகப் பெரிய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்] நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை நூஹ் நபியின் பேழையுடன் ஒப்பிட்டு இவ்வாறு கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் வழிமுறை நூஹ் நபியின் பேழையைப் போன்றது. யாராகிலும் இதை மேற்கொள்கிறார்களோ அவர்கள் இரட்சிப்பு அடைவார்கள். இன்னும் யாராகிலும் இதை மறுக்கிறார்களோ அவர்கள் மூழ்கிவிடுவார்கள்.

இவ்வாறான அஹ்லுஸ்ஸுன்னாவை எல்லோரும் புரிந்தும், இது சமுதாயத்தில் நிலவும் போது தான் உண்மை இரட்சிப்பு உணரப்படும்.

BROUGHT TO YOU BY:

THE HIDDEN PRESTIGE TEAM